“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர். முதல் படத்திலேயே மக்களிடையே உலகிற்கு வரவேற்பையும் பெற்றார். இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார்.
பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ். மேலும்,உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார். பின் அந்த நிகழ்ச்சியில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அப்போது தனது வாழ்க்கை குறித்து பேசிய ரேஷ்மா, தனக்கு வீட்டில் பார்த்து திருமணம்செய்து வைத்த வாழ்க்கை முறிந்து, பின்னர் அமெரிக்காவில் நானாக தேடிக்கொண்ட வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்ததாகவும், தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
அதோடு மட்டுமில்லாமல் தற்போது பாக்கியலட்சுமி சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜெனிபருக்கு பதிலாக ரேஷ்மா தான் நடிக்கிறார். இந்நிலையில், உடல் எடையை கணிசமாக குறைத்துள்ள ரேஷ்மா தற்போது கவர்ச்சியான உடைகளை அணிய தொடங்கியுள்ளார். அந்த வகையில், தற்போது One Side Sleeveless Saree-யில் ஒரு பக்கம் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் அளவுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.