விஜய் தொலைக்காட்சியில் அதிக பார்வையாளர்களை கவர்ந்தது பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் தான். அதிலும் குக் வித் கோமாளி வேற லெவல் ரீச். முதல் சீஸனில் வனிதா விஜயகுமார், ரேகா, ரம்யா பாண்டியன், நிஷா உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்.
முதல் சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் அடுத்து தற்போது சீசன் 2 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி அதுவும் மகத்தான வெற்றியை பெற்றது..
இந்த சீசனில் ஷகீலா, தர்ஷா குப்தா, சீரியல் நடிகை தீபா, மதுரை முத்து, பவித்ரா லட்சுமி, கனி, அஸ்வின், பாபா பாஸ்கர் உள்ளிட்டோரும், கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, விஜே. பார்வதி, டிக்டாக் சக்தி ஆகியோர் கலக்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் கனி, இரண்டாவதாக ஷகீலா, மூன்றாவதாக அஷ்வின் ஆகியோர் வெற்றி பெற்றனர். இதில் பங்கேற்ற பவித்ராவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். நிறைய இயக்குனர்கள் அவரை ஹீரோயினாக நடிக்க வைக்க வேண்டும் என்று ஆசை பட்டார்கள் மக்கள். அவர்களின் ஆசைப்படி நேற்று இவர் நடித்த நாய் சேகர் படம் ரிலீசானது.
இவர், மலையாளத்தில் உல்லாசம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது சில படங்களில் கமிட்டாகி வருகிறார். இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரின் வீடியோக்களை பார்த்து அவருடைய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. இடுப்பை காட்டி , உஷ்ணத்தை கூட்டி இவர் வெளியிட்ட வீடியோவை பார்த்த ரசிகர்கள் சொக்கிபோய் கிடக்கிறார்கள்