சிம்புவை போல் டாக்டர் பட்டம் பெற்ற பிக்பாஸ் அபிராமி!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை அபிராமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

மொடலிங் மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்த அபிராமி வெங்கடாசலம், பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு பிரபலமானார்.

அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில், 3 நடிகைகளில் இவரும் முக்கிய வேடம் ஏற்று நடித்திருந்தார்.

இவரது நடிப்பு பாராட்டுகளை பெற்றாலும், அடுத்தடுத்து பெரிய பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில் இவருக்கு செயின்ட் மதர் தெரசா பல்கலைகழகத்தின் சார்பாக டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

பரத நாட்டியத்தில் சிறந்து விளங்கியதற்காக இந்த பட்டம் வழங்கப்பட்டுள்ளதாம், இத்தகவலை மகிழ்ச்சியுடன் அபிராமி பகிர அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.