ஜேர்மனியில் அதிவேகம் எடுக்கும் கொரோனோ

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் 81,417 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவ தொடங்கி இரண்டு வருடங்கள் கடந்து இருந்தாலும் மக்களுக்கு அதன் மேல் உள்ள அச்சம் குறைந்தபாடில்லை. இதற்கு காரணம் அவ்வப்போது ஏற்படும் உருமாற்றம் தான்.

இந்நிலையில் கொரோனாவில் இருந்து புதிய வகை வைரஸ் ஒன்று உருமாறியுள்ளது. இதற்கு Omicron என்று சுகாதாரத்துறை பெயர்சூட்டியுள்ளது.

இது முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டாலும் நாளடைவில் 130க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. அந்த வகையில் ஜேர்மனியில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றது. இதேபோன்று Omicron பாதிப்புகளும் உயர்ந்து வருகின்றன.

இதுபற்றி தொற்று நோய்களுக்கான ராபர்ட் கோச் மையம் வெளியிட்டுள்ள செய்தியில் ஜேர்மனியில் தினசரி கொரோனா பாதிப்பில் புதிய உச்சம் அடைந்து உள்ளது. இதன்படி கடந்த 24 மணி நேரத்தில் 81,417 பேருக்கு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது.

இது ஒரு வாரத்திற்கு முன்பு பதிவாகி இருந்த எண்ணிக்கையை விட 17 ஆயிரம் கூடுதல் ஆகும்.