சிறிலங்கா தொடர்பில் கனடா விடுத்துள்ள அவசர எச்சரிக்கை…

இலங்கைக்கு பயணங்களை மேற்கொள்வது தொடர்பில், கனேடிய அரசாங்கம் அந்நாட்டு பிரஜைகளுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையின் பொருளாதார நிலைமைகளை மையமாகக் கொண்டு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார நிலைமைகள் நாளுக்கு நாள் மோசமடைந்து செல்வதாகவும்,மருந்து வகைகள், எரிபொருள் மற்றும் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி நிலைமையானது சுகாதார சேவைகள் உள்ளிட்ட அடிப்படை பொதுச்சேவைகளை வழங்குவதில் நெருக்கடியை உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரையறுக்கப்பட்ட வளங்கள் பாதுகாப்பு சூழ்நிலையில் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு, குடிநீர், எரிபொருள் போன்றவற்றின் கையிருப்பினை பேணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மருந்தகங்கள், எரிவாயு விற்பனை நிலையங்கள் மற்றும் மளிகை கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிடலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உணவுத் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து உள்நாட்டு ஊடகங்களை அடிக்கடி கவனிப்பதன் மூலம் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என கனேடிய பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.