குழந்தையின் உயிரை பறித்த கோர விபத்து

பதுளை – பசறை பிரதான வீதியின் ஐந்தாம் கட்டைப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் எட்டு மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

முச்சக்கரவண்டி ஒன்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

முச்சக்கர வண்டியைக் குழந்தையின் தாயே செலுத்தியதாகவும்,அவருக்குச் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் சம்பவத்தில் காயமடைந்த குறித்த தாய் மற்றும் முச்சக்கரவண்டியில் பயணித்த மற்றுமொரு ஆண் ஆகியோர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.