சிறிலங்கா நாடாளுமன்றத்தின் இந்த ஆண்டுக்கான புதிய கூட்டத் தொடர் எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
அதன் போது சிறிலங்கா சுதந்திரக் கட்சி கிளர்ச்சி ஒன்றை செய்ய தயாராகி வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்றத்தின் கூட்டத் தொடரரை அரச தலைவர் ஆரம்பித்து வைத்து தனது சிம்மாசன உரையை நிகழ்த்திய பின்னர், சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் இருந்து விலக திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதனடிப்படையில், அரசாங்கத்தில் இருந்து விலகி, எதிரணியில் அமர சுதந்திரக் கட்சி தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.
சுதந்திரக் கட்சி இப்படியான அரசியல் நடவடிக்கையை எடுத்தால், அன்றைய தினமே அரசாங்கம் தனது மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை இழக்கும் நிலைமை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.