90களில் தமிழ் சினிமாவை கலக்கி வந்தவர் நடிகை ரம்பா, பல இளைஞர்களின் கனவுக்கன்னியாகவும் வலம்வந்தார்.
முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த ரம்பா, 2010ம் ஆண்டு இலங்கையை பூர்வீகமாக கொண்ட தொழிலதிபர் இந்திரக்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் விவாகரத்து வரை சென்ற தம்பதியினர், தற்போது சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது, எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக உள்ள ரம்பா, அவ்வப்போது புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.
அந்தவகையில் சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள குடும்ப புகைப்படம் வைரலாகி வருகிறது, அப்படியே சின்ன வயதில் ரம்பாவை பார்த்த மாதிரி இருக்கு என அவரது மூத்த மகளை கொண்டாடுகின்றனர் ரசிகர்கள்.
View this post on Instagram