பிக்பாஸ் சீசன் 5 100 நாட்களை கடந்து விட்ட நிலையில் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்றைய நிகழ்ச்சியில் யாரும் எதிர்பாராத வகையில், பிரியங்கா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் அமீர் பாவனி செய்யும் ரொமான்ஸ் காட்சிகள் இன்று வரை தொடர்வதை பிக்பாஸ் கேமராவில் அடிக்கடி காட்டி வருகின்றனர்.
நேற்றையை எபிசோடிலும் இருவரும் கொஞ்சிக் கொஞ்சி சண்டைப்போட்டுள்ளனர். இதைப்பார்த்த பாவனியின் ரசிகர்கள் அமீர் மீது செம கடுப்பாகி உள்ளனர்.
மேலும், ஹார்ட் கொடுக்கும் டாஸ்கில் யாரும் எனக்கு ஹார்ட் தரவில்லை அப்போது மிகவும் வருத்தப்பட்டேன் என்று பாவனியிடம் கூறிக்கொண்டு இருந்தார்.
உடனே பாவனி அது மட்டும் ஹார்ட்டாக இல்லாமல் இருந்து இருந்தா நான் நிச்சயம் உனக்கு கொடுத்து இருப்பேன், ஹார்ட் என்பதால் யாராவது எதாவது சொல்லுவாங்கனு தரவில்லை எனக்கூறினார்.
அதற்கு, அமீர் என்ன பாவனி மனசார எதுவுமே பண்ண மாட்டியா? ஒரு ஃப்ரண்டா நினைச்சி ஹார்ட் கொடுத்து இருக்கக்கூடாதா என கேட்டு பாவனியிடம் செல்ல சண்டை போடுகிறார்.
இதனைக்கண்ட நெட்டிசன்கள் அமீரை திட்டி மீம்ஸ்கள் போட அவர் வேண்டும் என்றே டிஆர்பி-க்காக இதையெல்லாம் செய்கிறார் என கூறி வருகின்றனர்.