தென்னிலங்கை உலுக்கிய பயங்கரம்… வெளியான தகவல்!

தென்னிலங்கையில் இடம்பெற்ற திருமண நிகழ்வின் போது ஏற்பட்ட முரண்பாடு கொலையில் முடிந்துள்ளது.

திஸ்ஸமஹாராம, விரஹெல பிரதேசத்தில் திருமண வீட்டில் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக நபர் ஒருவரின் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் மூத்த மகளின் கணவரினால் நேற்று மனைவியின் தந்தையின் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் 54 வயதுடைய படவிகம, லுனுகம்வெஹெர பிரதேசத்தை சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார்.

கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் அந்தப் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் திஸ்ஸமஹாராம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.