எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் தரமான கோதுமை மாவின் பற்றாக்குறை ஆகியவை பேக்கிங் தொழில் முடங்கியுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. நாட்டில் உள்ள 7,000 பேக்கரிகளில் சுமார் 3,500 பேக்கரிகள் பெட்ரோல் பற்றாக்குறையால் சேவையில் ஈடுபடவில்லை என்று சங்கம் சுட்டிக்காட்டுகிறது.
இதற்கிடையில், அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு பதிலாக சீனா, ரஷ்யா, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து உயர்தர தானியங்கள் மற்றும் கோதுமை மாவு இறக்குமதியானது பேக்கரி உணவு உற்பத்தியில் கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.
டொலர் தட்டுப்பாடு காரணமாக தரமான கோதுமை மாவின் இறக்குமதியும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.