கனடாவில் தன்னிடம் படித்த மாணவ, மாணவிகளிடம் அத்துமீறிய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒன்றாறியோவின் விண்ட்ஸ்டரில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த 34 வயதான நபர் மீது தொடர் பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது தொடர்பான விசாரணை கடந்த டிசம்பரில் தொடங்கியது.
அதே மாதத்தில் அவரிடம் படித்த 5 பேர் வரிசையாக பொலிசில் ஒரு புகார் கொடுத்தனர். அதில், தங்கள் மீது தவறாக கை வைத்து ஆசிரியர் அத்துமீறியதாக குறிப்பிட்டிருந்தனர்.
அனைவருமே 18 வயதுக்கு கீழானவர்கள் என்ற நிலையில் பொலிசார் விசாரணையை துவங்கினர். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் குறித்த ஆசிரியரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுசெய்யப்பட்டுள்ளது. அந்த ஆசிரியரால் மேலும் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கருதும் பொலிசார் அவர்கள் தைரியமாக முன் வந்து புகார் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை பாதுகாக்கும் வகையில் தற்போது இது தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.