பயணம் செய்யும் போது ஒய்யாரமாக ரோஷினி செய்த செயல்.!

விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா சீரியல் கடந்த சில வருடங்களாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்திற்கு நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது.

இதில் கண்ணம்மாவாக ரோஷ்னி ஹரிப்ரியன் நடித்துவந்தார். அவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். முன்னதாக ரோஷினி ஹரிப்ரியன் நிறைய யூடியூப் குறும்படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்து இருக்கிறார்.

அப்போதெல்லாம் கிடைக்காத புகழ் அவருக்கு விஜய் டிவியின் மூலமாகத்தான் கிடைத்தது. இந்த நிலையில் தற்போது ரோஷினி ஹரிப்ரியனுக்கு வெள்ளித்திரையில் கதாநாயகியாகும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறி சமீபத்தில் அவர் பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு விலகினார்.

இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக ரோஷ்ணி ஹரிப்ரியன் பங்கேற்க உள்ளார். அவர் போட்டியாளராக பங்கேற்கும் வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது.

இந்த நிலையில், அவர் பயணம் செய்த புகைபடங்களை மகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது வைரலாகி வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Roshni Haripriyan (@roshniharipriyan)