ரஜினியின் மூத்தமகளான ஐஸ்வரியா உடனான விவாகரத்து முடிவை நடிகர் தனுஷ் தமது டுவிட்டர் பக்கம் ஊடாக அறிவித்துள்ளார்.
ரஜினியின் மருமகன் என்பதாலையே இந்தி திரையுலகம் வரையில் தமது தொடர்புகளை விரிவுபடுத்திக் கொண்ட தனுஷின் இந்த திடீர் முடிவுக்கு என்ன காராம் என பல விதமான யூகங்கள் வெளியாகி சமூக ஊடகங்களை அதிர வைத்து வருகிறது.
தனுஷிற்கும், ஐஸ்வர்யாவிற்கும் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் தாங்கள் பிரிந்து செல்ல முடிவு செய்திருப்பதாகவும், புரிந்து கொள்ள தங்களுக்கு போதிய கால அவகாசம் தேவை எனவும் இருவரும் தனித்தனியாக தாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் இவர்களின் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என பல விதமான தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது. இருவரும் திருமணமாகி 18 ஆண்டுகள் சந்தோஷமாக தான் வாழ்ந்ததாகவும், சமீபத்தில் தான் இருவருக்கும் இடையே பிளவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தங்கமகன் படத்திற்கு பிறகு சமந்தாவுடன், தனுஷ் நெருக்கம் காட்டி வருவதாகவும், அதனால் ஐஸ்வர்யா – தனுஷ் இடையே மனகசப்பு உருவாகியதாகவும் கூறப்படுகிறது. சமந்தா – நாகசைதன்யா விவகாரத்து சமயத்திலும் அதன் பின்னணியில் தனுஷ் இருப்பதாக சில தகவல்கள் கிசுகிசுக்கப்பட்டது.
இவர்களின் விவாகரத்திற்கு மற்றொரு புதிய காரணமும் கூறப்படுகிறது. ரஜினியின் வற்புறுத்தலின் பேரில் தான் போயஸ் கார்டனில் தனுஷ், பிரம்மாண்ட வீட்டை கட்டி வருகிறாராம்.
இதனால் கடன் பிரச்சனையில் தனுஷ் சிக்கியதாகவும், அந்த சமயத்தில் உதவாமல் ரஜினி கை விரித்து விட்டதாகவும், அதனால் மனவருத்தம் மற்றும் விரக்தியில் இருந்த தனுஷ், கடன் பிரச்சனையை சமாளிக்க ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த பிரச்சனையும் அவர்களின் விவாகரத்திற்கு ஒரு காரணம் என கூறுகிறார்கள்.