வவுனியா பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் சுகாதார பரிசாரகர் ஒருவரின் ரிக்ரொக் வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில் அது குறித்து சமூக ஆர்வலர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
இன்றைய காலத்தில் பலர் ரிக்ரொக் வீடியோவிற்கு அடிமையாகியுள்ளனர். ஆடல், பாடல், நடிப்பு என பலவிதமான வீடியோக்களை அவர்கள் பதிவிடுகின்றனர். இந்த நிலையில் அண்மையில் வெளியான ஊ சொல்றியா மாமா உள்ளிட்ட பாடல்களிற்கு வீடியோ வெளியிட்டுள்ளார்.
வவுனியா வைத்தியசாலையின் சுகாதார பரிசாரகரான பெண்ணொருவர். அவர் வெளியிட்ட வீடியோக்களில் பல வைத்தியசாலைக்குள்ளேயே பதிவாகியுள்ளதுடன், கடமை நேரத்தில், சீருடையுடனும் குறித்த பெண் வீடியோ பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் வைத்தியசாலை பணியாளர் ஒருவர், வைத்தியசாலைக்குள், கடமை நேரத்தில் இப்படி ரிக்ரொக் வீடியோக்கள் பதிவு செய்து வெளியிடலாமா என ப சமூக ஆர்வலர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.