நாட்டின் வானிலை மாற்றம்!

இலங்கையின் சில பகுதிகளில் இன்று (19) மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேலும் இன்றைய வானிலை குறித்து கூறப்பட்டுள்ளதாவது,

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.