ஒன்ராறியோவின் வாசகா கடற்கரை பகுதியில் பெண் ஒருவர் வீடு புகுந்து கடத்தப்பட்ட வழக்கில் முக்கிய தகவலை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
கடந்த வாரம் புதன்கிழமை வாசகா கடற்கரை பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றிற்கு மூன்று பொலிசார் சென்றுள்ளனர்.
அவர்கள், 37 வயதான Elnaz Hajtamiri என்பவரை கைது செய்ய வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் குறித்த மூவரின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட குடியிருப்பின் உரிமையாளர் உடனடியாக 911 இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள முயன்றுள்ளார்.
ஆனால் சுதாரித்துக் கொண்ட பொலிஸ் வேடமணிந்த அந்த மூவர் கும்பல் வலுக்கட்டாயமாக Elnaz Hajtamiri என்பவரை கடத்தி சென்றுள்ளனர்.