கனடாவில் இருந்து Omicron திரிபு சீனாவிற்கு பரவியதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டு நகைப்பிற்குரியது என கனடா தெரிவித்துள்ளது.
கனடாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட தபால் மூலம் Omicron திரிபு சீனாவின், பெய்ஜிங் நகர பிரஜையொருக்கு தொற்றியதாக சீன சுகாதார அதிகாரிகள் குற்றம் சுமத்தியிருந்தனர்.
இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டு அடிப்படையற்றது எனவும் நகைப்பிற்குரியது எனவும் கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கனடாவில் இருந்து ஹொங்கொங் வழியாக பெய்ஜிங்கை அடைந்த தபால் அல்லது பொதி ஒன்றின் மூலம் இந்த ஒமிக்ரோன் திரிபு பரவியதாக சீன அரசாங்க ஊடகம் தெரிவித்திருந்தது.
தபால் மூலம் Omicron திரிபு பரவுவதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவு என கனேடிய தபால் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது