பாகிஸ்தானில் வாட்ஸ்-அப்பில் அவதூறு பரப்பிய பெண்ணுக்கு கிடைத்த தண்டனை

வாட்ஸ்-அப்பில் அவதூறு பரப்பிய பெண்ணுக்கு பாகிஸ்தான் ராவல்பிண்டி கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

பாகிஸ்தானை சேர்ந்த அனீகா ஆதிக் என்ற பெண் தனது ‘வாட்ஸ்-அப்’ ஸ்டேட்டசில் அவதூறு குறுஞ்செய்தியையும் மற்றும் கேலி சித்திரத்தையும் வெளியிட்டதாக கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக அனீகா ஆதிக்குக்கு பாகிஸ்தான் ராவல்பிண்டி கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

சாகும் வரை அவரை தூக்கிலிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.