மேற்கத்திய நாடுகள் சர்வாதிகாரத்தை எதிர்த்து நிற்கும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோருக்கு பிரித்தானியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
வருடாந்திர அவுஸ்திரேலிய-பிரித்தானியா அமைச்சக ஆலோசனைக்காக (AUKMIN), பிரித்தானியா வெளியுறவுத்துறை செயலாளர் Liz Truss மற்றும் பிரித்தானியா பாதுகாப்புச் செயலாளர் பென் வாலஸ், வெள்ளியன்று சிட்னியில் அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்தனர்.
இதன்போது அவுஸ்திரேலியா அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்ந சந்திப்பை தொடர்ந்து பிரித்தானியா-அவுஸ்திரேலிய அமைச்சர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.
அதில், ரஷ்ய இராணுவம் உக்ரைன் உடனான எல்லைக்கு அருகே குவிக்கப்பட்டு வருவது குறித்து கவலையை தெரிவித்தனர் மற்றும் உக்ரைனுக்கு அவர்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.
Lowy இன்ஸ்டிடியூட்டில் உரை ஆற்றிய பிரித்தானியா வெளியுறவுத்துறை செயலாளர் Liz Truss, பெரிய தவறு செய்வதற்கு முன் உக்ரைனில் இருந்து விலகி, பின்வாங்க வேண்டும் என்று புடினை எச்சரித்தார்.
ரஷ்யா வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை.
ஆக்கிரமிப்பு ஒரு பயங்கரமான புதைகுழி மற்றும் உயிரிழப்புக்கு மட்டுமே வழிவகுக்கும் என்று, சோவியத்-ஆப்கானியப் போர் மற்றும் செச்சினியாவில் நடந்த மோதலில் இருந்து நாம் கற்றுக்கொண்டோம்.
அவர்கள் சர்வாதிகாரத்தை உலகம் முழுவதும் பரப்ப முற்படுகிறார்கள்.
அவுஸ்திரேலியா, இஸ்ரேல், இந்தியா, ஜப்பான் மற்றும் இந்தோனேசியா போன்ற நட்பு நாடுகளுடன் பிரித்தானியா இணைந்து உலகளாவிய ஆக்கிரமிப்பாளர்களை எதிர்கொள்வதற்கு குறிப்பாக பசிபிக் பகுதியில் செயல்பட வேண்டும்.
சுதந்திர உலகம் அதன் நிலைப்பாட்டில் நிற்க வேண்டிய நேரம் இது.
அவுஸ்திரேலியா மீதான சீனாவின் பொருளாதார வற்புறுத்தல், சீனா தனது பொருளாதார வலிமையைப் பயன்படுத்தி மற்ற நாடுகளின் மீது கட்டுப்பாட்டைச் செலுத்துகிறது என்பதை அறிந்து பிரித்தானியா விழித்துக்கொள்ள வேண்டியதற்கான அழைப்பு மணி என Liz Truss தெரவித்துள்ளார்.