சுழிபுரம் மத்தியில் கணவன், மனைவி இருவரை காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் (20-01-2022) வியாக்கிழமை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் யாழ்.சுழிபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றை சோதனையிட்டுள்ளனர்.
குறித்த சோதனை நடவடிக்கையின் போது கஞ்சா மீட்கப்பட்டதோடு வீட்டின் உரிமையாளரும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் காங்கேசன்துறைப் பொலிசார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.