எருமசாணி ஹரிஜாவின் ரீல்ஸ் வீடீயோ.!

யூடியூப் வீடியோக்களால் பிரபலமடைந்த எருமசாணி ஹரிஜா தற்போது மீண்டும் அதே சேனலில் கைகோர்த்துள்ளார். திருமணம், குழந்தை என்று சினிமாவை ஒதுக்கி வைத்த ஹரிஜா மீண்டும் களமிறங்கி இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

பல்வேறு யூடியூப் சேனல்கள் மற்றும் என்டர்டைன்மென்ட் வீடியோ வெப்சீரிஸ் என்று தற்போது கலக்கி வருகிறது. அந்தவகையில் 90ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த சேனல் தான் எருமசாணி இந்த சேனலில் ஹரிஜா மற்றும் விஜய் இருவரும் சேர்ந்து செய்யும் சேட்டைகள் மறக்க முடியாத அளவிற்கு காமெடியாக இருக்கும்.

 

View this post on Instagram

 

A post shared by Harija (@harijaofficial)

அதிலும் ஹரிஜாவின் ,”போடா எரும சாணி கிறுக்கு பயலே…” என்ற வசனம் அல்டிமேட் என்றே கூறலாம். இந்த டயலாகின் மூலமே ஹரிஜா பிரபலமாகிவிட்டார். ஹரிஜா கடந்த 2018 ஆம் ஆண்டில் தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு ஹரிஜா அமர் என்ற பெயர் சூட்டியுள்ளார்.

அவ்வப்போது தனது குடும்பத்தில் நடக்கும் நகைச்சுவைகளை வீடியோவாக ஹரிஜா பதிவிட்டு வருவார். தற்போது ஹரிஜா மீண்டும் எருமசாணி யூடியூப் சேனலில் பணியாற்றி வருகின்றார். இத்த்கைய நிலையில், ஹரிஜா டாக்டர் போல உடையணிந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.