இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி செயற்பாடுகள் அனைத்தும்,சட்ட திருத்தங்களை மாத்திரம் மேற்கொண்டு பிரச்சினைகளுக்கு தீர்வுகான முடியாது எனவும், திராத மீன்பிடிப் பிரச்சனையை சுமுகமாக கையாளுவோம் என்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
நேற்று நீதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
இந்திய மீனவர்கள் வடக்கு கடல் எல்லையில் அத்துமீறிய மீன்பிடிப்பது,நீண்டகால பிரச்சினையாக காணப்படுகின்றது. எனினும் இதில் நீதி அமைச்சு நேரடியாக தலையிட்டு இந்த விடயங்களை தீர்க்க முடியாது.
இதுக்குறித்து இலங்கை கடற்படை, வெளிவிவகார அமைச்சு மற்றும் மீன்பிடித்துறை அமைச்சு ஆகியவற்றின் தலையீட்டுடனே இந்த பிரச்சனைக்கு தீர்வுகளை முன்னெடுக்க முடியும். அதன்படி மீன்பிடித்துறை அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவுடன் இது குறித்து பேசவுள்ளோம்.
அவசியமான சட்ட திருத்தங்களைச் செயல்படுத்த வேண்டும் என்றால் கலந்துரையாடல் மூலமாக முடிவு எடுக்க நேரிடும் எனவும் அவர் கூறினார். அதேசமயம் சட்ட திருத்தங்களை மாத்திரம் பின்பற்றி இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகான முடியாது.
இராஜதந்திர உறவுமுறையும் இதில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்தியாவும் இலங்கையும் நட்பு நாடு,அவர்களுடன் உள்ள முரண்பாடுகளை ஆரோக்கியமாக கலந்துரையாடியே பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.
மேலும் தனிச்சையாக எம்மால் இந்த விடயங்களை கையாள முடியாது என்றும் தெரிவித்த நீதி அமைச்சர் அலி சப்ரி, சகலரையும் கவனத்தில் கொண்டே செயற்படுகின்றோம் எனவும் தெரிவித்தார்.