விடுதி ஒன்றில் கைதான திருமணமான யுவதிகள்

கொழும்பு கொள்ளுப்பிட்டி அல்பிரட் ஹவுஸ் பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விடுதியொன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. இதன்போது விடுதியின் முகாமையாளர் உட்பட பத்து பெண்களை கைது செய்துள்ளனர்.

இதன் முகாமையாளர் கந்தானை பிரதேசத்தில் வசிக்கும் 60 வயதுடையவர் என்றும், பெண்கள் 27, 32, 33, 41, 42 மற்றும் 52 வயதுடைய அத்திடிய, களனி, ஓபநாயக்க, கொகரெல்ல, பிலியந்தலை, மாத்தறை மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் வசிக்கும் திருமணமான பெண்கள் எனவும் கூறப்படுகின்றது.

குறித்த விடுதி அமைந்துள்ள கட்டிடம் மாதம் 300,000 ரூபா வாடகைக்கு விடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதான பெண்கள், கொழும்பில் தாங்கள் மிகச் சிறப்பாக தொழில் செய்து வருவதாக வீடுகளுக்குத் தெரிவித்து, விபச்சாரத்தில் ஈடுபட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து கைதான சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.