ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் அண்ணாத்த படம் வெளியானது. இப்படம் வசூலில் பல சாதனைகளை செய்தது.
இதனை தொடர்ந்து ரஜினிகாந்த், கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியானது.
அதுமட்மின்றி, மீண்டும் சிறுத்தை சிவாவுடன் இணைவார் என்றும் திரை வட்டாரங்களில் கூறப்பட்டது.
இதன்பின் சிலர் பால்கி தான் ரஜினியின் அடுத்தப்பட இயக்குனர் என்று கூறினர். மேலும், இயக்குனர் நெல்சன் திலிப்குமார் கூட ரஜினிக்கு கதை கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிகை பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளார் என்று கிசுகிசுக்கப்படுகிறது.
ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மையானது என்று தெரியவில்லை.