ஹட்டன் பிரதான வீதியின் தரவளை பட்டல்கலை பகுதிக்கு அருகில் 2இன்றுகாலை இடம்பெற்ற கோரவிபத்தில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 16 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று காலை 6.45 மணியளவில் சலங்கந்தை பகுதியிலிருந்து ஹட்டனில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு பயணித்த பஸ், வீதியை விட்டு விலகி சுமார் 30 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
எதிரே வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றுக்கு இடம் கொடுக்க முயன்ற போது,குறித்த தனியார் பஸ்சானது பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் விபத்தில் பஸ் சாரதி உட்பட 16 பேர் காயமடைந்த நிலையில் காணப்பட்டு, டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அதேவேளை ஒருவர் சிகிச்சை பலன்றி உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர் டிக்கோயா போடைஸ் பகுதியை சேர்ந்த 62 வயதுடைய பெர்ணாண்டோ மரியசவாரி என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் குறித்த பஸ்ஸின் சாரதி ஹட்டனை கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவரை ஹட்டன் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.