Omicronஇன் மகன் என்று அழைக்கப்படும் புதிய கொரோனா வைரஸ் அவுஸ்திரேலியாவுக்குள்ளும் நுழைந்துள்ளது.
Omicron வகை மரபணு மாற்ற கொரோனா வைரஸ், BA 1 என்று அழைக்கப்படும் நிலையில், அதன் துணை மரபணு மாற்ற வைரஸான BA 2 என்னும் ஒரு வைரஸ், ஐரோப்பாவில் பல நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டு வேகமாக பரவிவருகிறது.
இப்போதைக்கு stealth வைரஸ் என வர்ணிக்கப்படும் இந்த BA 2 வைரஸ், அதிக அபாயகரமானதாக தோன்றவில்லை. ஆனால், பிரச்சினை என்னவென்றால், முந்தைய கொரோனா வைரஸ்களைப்போல இந்த BA 2 வைரஸை பிசிஆர் பரிசோதனையில் கண்டுபிடிக்க முடியாது.
மெல்போர்ன் தொற்றுநோயியல் நிபுணரான பேராசிரியர் Nancy Baxter கூறும்போது, ஆரம்ப கட்ட தரவுகளை வைத்துப் பார்க்கும்போது, BA 2 வைரஸ், BA.1 வைரஸைவிட, அதாவது முந்தைய Omicron வைரஸைவிட அதிக அளவில் தொற்றக்கூடியதாக இருக்கலாம் என தோன்றுவதாக தெரிவித்துள்ளார்.