மன அமைதிக்கு சொல்ல வேண்டிய வைஷ்ணவி தேவி காயத்ரி மந்திரம் என்ன தெரியுமா?

வெள்ளிக்கிழமைகளில் வீட்டு பூஜையறையில் லட்சுமி தேவியின் படத்திற்கு வாசமுள்ள பூக்களை சமர்ப்பித்து, இனிப்பை நைவேத்தியம் வைத்து, மந்திரத்தை 108 முறை துதித்து வந்தால் குடும்பத்தில் மன அமைதி உண்டாகும்.

அனைத்து உயிர்களின் மீது மிகவும் அன்பு கொண்ட தெய்வமான வைஷ்ணவி தேவிக்குரிய இந்த காயத்ரி மந்திரத்தை ஜெபித்து வழிபடுவதால் வாழ்வில் செல்வ வளங்கள் கிடைக்கப்பெறுவார்கள்.

ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
சக்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வைஷ்ணவீ ப்ரசோதயாத்

விஷ்ணுவின் பத்தினியான வைஷ்ணவி தேவிக்குரிய காயத்ரி மந்திரம் இது. இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் காலையில் 27 முதல் 108 எட்டு முறை வரை துதிப்பது நல்லது. வெள்ளிக்கிழமைகளில் உங்கள் வீட்டு பூஜையறையில் லட்சுமி தேவியின் படத்திற்கு வாசமுள்ள பூக்களை சமர்ப்பித்து, இனிப்பை நைவேத்தியம் வைத்து, மந்திரத்தை 108 முறை வடக்குத் திசையைப் பார்த்தவாறு துதித்து வந்தால் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை மாறி மகிழ்ச்சி, மன அமைதி உண்டாகும். வீட்டில் செல்வச் சேர்க்கை ஏற்படும். வீண் விரயங்கள் ஏற்படுவது நீங்கும்.

ஆதிசேஷன் என்னும் பாம்பின் மீது யோக நித்திரையில் இருந்தவாறு உலகத்தை இயக்குகிறார் நாராயணன் ஆகிய ஸ்ரீ மகாவிஷ்ணு. அந்த மகாவிஷ்ணுவின் பத்தினியான லட்சுமி தேவி தான் வைஷ்ணவி என அழைக்கப்படுகிறார். அனைத்து உயிர்களின் மீது மிகவும் அன்பு கொண்ட தெய்வமாக வைஷ்ணவி தேவி இருக்கிறார். அந்த தேவிக்குரிய இந்த காயத்ரி மந்திரத்தை ஜெபித்து வழிபடுவதால் வாழ்வில் செல்வ வளங்கள் கிடைக்கப்பெறுவார்கள்.