இலங்கைக்கு விஜயம் செய்துள்ள துருக்கி வெளிவிவகார அமைச்சர் Mevlut Cavusholu இன்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் G.L.பீரீஸை சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது இரட்டை வரி விதிப்பு விலக்கு தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
மேலும் இலங்கையின் வர்த்தகம், சுகாதாரம், மருந்துகள், கட்டுமானம் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக துருக்கி வெளிவிவகார அமைச்சர் Mevlut Cavusholu இதன்போது தெரிவித்ததாகவும் கூறப்படுகின்றது.