நடிகை ஸ்ரீதிவ்யாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா.?

நடிகை ஸ்ரீ திவ்யாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் ஸ்ரீதிவ்யா. முதல் திரைப்படத்திலேயே தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.

அதனைத் தொடர்ந்து காக்கி சட்டை, சங்கிலி புங்கிலி கதவ தொற, ஈட்டி, பென்சில், ஜீவா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் அதர்வாவுடன் ஒத்தைக்கு ஒத்த என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை ஸ்ரீதிவ்யாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இவருடைய மொத்த சொத்த மதிப்பு சுமார் 10 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.