தமிழில் நடிகர் சரத்குமார் நடித்த பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. தனது முதல் படத்திலேயே ஆண்ட்ரியா முத்த காட்சிகள் நெருக்கமான ரொமான்ஸ் காட்சிகள் என்று நடித்து ரசிகர்களிடம் புகழ் பெற்றுவிட்டார்.
அதன் பின்னர் அவர் செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் கதை களமும் வித்தியாசமாக இருக்கும். அதுபோல ஆண்ட்ரியாவின் கதாபாத்திரமும் வித்தியாசமாகவே இருக்கும்.
ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்கு பின்னர் நடிகை ஆண்ட்ரியா மங்காத்தா, விஸ்வரூபம், வட சென்னை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
View this post on Instagram
நடிகை ஆண்ட்ரியா பின்னணி பாடகியாகவும் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் பணிபுரிந்துள்ளார். திரைத்துறையில் நடிப்பதற்கு முன்பு அவர் பாடகியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய நிலையில் நடிகை ஆண்ட்ரியா சமூக வலைதளப் பக்கத்தில் சட்டையை புரட்டி தலைகீழாக போட்டுக்கொண்டு ஆன்ட்ரியா வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.