இலங்கை தொடர்பில் இந்தியா வெளியிட்ட முக்கிய தகவல்!

இலங்கைக்கு அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் ஒத்துழைப்புக்களை வழங்க தயாராக உள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.

இலங்கையில் கொரோனா தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

அதில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வெற்றிகரமான தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, இலங்கையின் தலைமைத்துவத்திற்கும், சுகாதார அமைச்சிற்கும், முன்னிலை சுகாதார ஊழியர்களுக்கும் மற்றும் கொரோனா தடுப்பூசி வழங்கலுடன் தொடர்புடைய அனைவருக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவினால் 5 இலட்சம் தடுப்பூசிகள் நன்கொடையாக வழங்குவதற்கு திட்டமிடப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில், அவை கிடைப்பதற்கு முன்னதாகவே இலங்கையில் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கக் கூடியதாகக் காணப்பட்டமை மகிழ்ச்சிக்குரியது.

சாத்தியமான அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு ஒத்துழைப்புக்கள் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.