இன்று உலகம் முழுவதும் பரவியுள்ள ஒமைக்ரான் வைரஸில் 96 சதவீத வைரஸ்கள் பிஏ.1 மற்றும் பிஏ.1.1 ஆகிய உருமாற்ற வகைகள் ஆகும்.
ஒமைக்ரான் வைரஸின் உருமாற்றம் அடைந்த பிஏ.2 வைரஸ் 57 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் பரவ தொடங்கிய ஒமைக்ரான் வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்தியாவில் கடந்த 2 வாரங்களாக ஒமைக்ரான் வைரஸால் 3-வது அலை ஏற்பட்டது.
இதை தொடர்ந்து ஒமைக்ரான் வைரஸ் பிஏ.1, பிஏ 1.1, பிஏ.2 மற்றும் பிஏ.3 எனவும் உருமாற்றம் அடைந்ததாக உலக சுகாதார மையம் அறிவித்தது.
இன்று உலகம் முழுவதும் பரவியுள்ள ஒமைக்ரான் வைரஸில் 96 சதவீத வைரஸ்கள் பிஏ.1 மற்றும் பிஏ 1.1 ஆகிய உருமாற்ற வகைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது 57 நாடுகளில் பிஏ.2 வகை ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளதாக உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது. இந்த வைரஸ் குறித்து குறைவாகவே தெரியவந்துள்ள போதிலும் நம் நோய் எதிர்ப்பு சக்திக்கு கட்டுப்படாதவகையில் இந்த வைரஸ் ஆபத்தானதாக இருப்பதாக முதற்கட்ட ஆய்வில் கூறப்பட்டுள்ளது.