மாதவிடாய் கப்பை எப்படி பயன்படுத்துவது என்று தெரியுமா?

மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் தரம் குறைந்த நாப்கின்கள் மற்றும் துணியால் பல பெண்கள் பள்ளி, கல்லூரி, வேலை என தங்கள் இயல்பு வாழ்க்கையில் இருந்து சற்று விலகியே இருக்கிறார்கள்.

தொழில்நுட்ப வளர்ச்சி புதிய கண்டு பிடிப்புகள் என வளர்ச்சிப்பாதையில் முன்னேறி கொண்டிருந்தாலும், சில விஷயங்கள் மாறாமல் அப்படியே தான் இருக்கின்றன. அதில் மாதவிடாய் சுகாதராமும் ஒன்று இன்றும் மாதவிடாய் குறித்து விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது.

மாதவிடாய் பிரச்சனைக்கு சானிடரி நாப்கின்கள் வரப்பிரசாதமாக இருந்தாலும், அவற்றால் சுற்றுப்புறச்சூழல் பாதிக்கப்படுகிறது.

மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் தரம் குறைந்த நாப்கின்கள் மற்றும் துணியால் பல பெண்கள் பள்ளி, கல்லூரி, வேலை என தங்கள் இயல்பு வாழ்க்கையில் இருந்து சற்று விலகியே இருக்கிறார்கள். அந்த நாட்களில் ஏற்படும் சரும பிரச்சனைகள் , உடல் நல பிர்ச்சனைகளால் அடுத்து சில நாட்கள் வரையிலும் அவதிப்படுகிறார்கள். அதற்கு சிறந்த எளிதான தீர்வு மாதவிடாய் கப். இதை பயன்படுத்துவது எளிது. இதனால் சுகாதாரம் காக்கப்படும். ஆகையால் இந்தியாவின் பல கிராமங்களில் உள்ள பெண்களுக்கு மாதவிடாய் கப் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதை தடுக்க மாதவிடாய் கப்களை தற்போது சந்தையில் கிடைக்கின்றன. இவற்றை பற்றி அறிந்துகொள்ளலாம்.

மாதவிடாய் கப்பை எப்படி பயன்படுத்துவது?

மாதவிடாய் கப்பை உயர்தர மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் சிலிக்கான் கொண்டு பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு வடிவமைத்துள்ளோம். அதை பயன்படுத்துவது மிகவும் எளிது. அதேபோல் எளிதில் அப்புறப்படுத்தும் விதமாக கப்பின் கீழ் பகுதியில் ஒரு ரிங் பொருத்தப்பட்டிருக்கும். ஒரு மாதவிடாய் கப்பை 10 வருடங்கள் வரை பயன்படுத்தலாம். மாதவிடாய் காலத்தின் போது மட்டும் மாதவிடாய் கப்பை சுடு தண்ணீரில் போட்டு 5 நிமிடங்கள் வரை கொதிக்க விட வேண்டும். பயன்படுத்துவதற்கு முன்பும், பயன்படுத்தியபின்னரும் சாதாரணமாக தண்ணீரில் கழுவி அதை பாதுகாத்து வைக்கலாம்.

இன்றும் பெண்களிடம் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு குறைவாகவே இருக்கிறது. அதிலும் கிராமப்புற பெண்களே அதிக பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் மாதவிடாய் குறித்து வெளிப்படையாக பேச ஆரம்பித்தால் தான் அதற்கான தீர்வு கிடைக்கும். பெரும்பாலும் நாம் அம்மா, அக்காவிடமிருந்து தான் மாதவிடாய் பற்றி கேட்டு தெரிந்து கொள்கிறோம். மாதவிடாய் எதனால் ஏற்படுகிறது? அதன் நன்மைகள் என்ன? மாதவிடாய் சுழற்சி என்பது என்ன? மாதவிடாய் காலத்தில்ன போது நான் என்ன செய்ய வேண்டும்? என்பதை பற்றி பள்ளி கல்வியுடன் சேர்த்து கற்றுக்கொடுக்க வேண்டும்.

மாதவிடாய் மிகவும் இயற்கையானது. நம் உடலுக்கு நன்மை அளிக்கக்கூடியது. ஆகையால் அந்த நேரங்களில் நம் கனவுகளை தொலைக்க வேண்டிய அவசியம் இல்லை. நம் கனவுக்கும், லட்சியப்பாதைக்கும் மாதவிடாய் ஒரு தடையில்லை. முயற்சிக்கலாம்… முன்னேறலாம்….