கீரையால் நமக்கு கிடைக்கும் நன்மை அதிகம்தான் என்றாலும் அதை அதிகமாகவும் உட்கொள்ளக் கூடாது.
அவை நமக்கு பக்க விளைவுகளை உண்டாக்கலாம்.
இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தவர வகைகளில் உள்ள ஆக்ஸாலிக் அமிலம் அளவுக்கு அதிகமாக இருக்கும்போது மற்ற ஊட்டச்சத்துக்களை உறிஞ்சிவிடும். குறிப்பாக ஸிங்க், மெக்னீசியம் மற்றும் கால்சியம் ஆகியவற்றுடன் ஆக்ஸாலிக் அமிலமும் பிணைக்கப்பட்டிருப்பதால் தாதுப் பற்றாக்குறையை உண்டாக்கும்.
அதிக அளவில் கீரை உட்கொள்வது ஒவ்வாமையை வெளிப்படுத்தலாம்.
இது தீவிரமாக இல்லாமல் தற்காலிகமாக இருக்கலாம். இதற்கு கீரையில் உள்ள ஹிஸ்டமைன் அளவு அதிகரிப்பதே காரணம்.
அதிக அளவில் கீரையை ஒரே நேரத்தில் சாப்பிடுவது நச்சு எதிர்வினையை உண்டாக்கும். நச்சுத்தன்மையை அதிகரித்துவிடும்.
கீரையில் அதிக நார்ச்சத்து இருப்பதால் அவை வாயு, வயிறு வீக்கம், குடல் வீக்கம் , வயிற்றுப் பிடிப்பு , வயிற்று வலி, வயிற்றுப் போக்கு போன்ற உபாதைகளை உண்டாக்கும்