மீண்டும் சீரியலில்நடிக்க வந்த பிக்பாஸ் பிரபலம் ஒருவரின் தந்தை

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது காரசாரமாக நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து 24 மணிநேரமும் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில், தொடர்ந்து பல சண்டைகளை பார்த்து வருகிறோம்.

அதிலும், வனிதா செய்து வரும் அராஜகம், நிகழ்ச்சி பார்பவர்களேயே கடுப்பாக வைக்கிறது.

இந்நிலையில், வனிதாவின் தந்தையும் 70, 80, மற்றும் 90 காலகட்டத்தில் கொடிகட்டி பறந்த நடிகருமான விஜயகுமார் மீண்டும் சீரியலில் நடிக்கவந்துள்ளார்.

இவர், இதற்கு முன் தங்கம், வம்சம், நந்தினி உள்ளிட்ட பல சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

அந்த வகையில் தற்போது நீண்ட நாட்கள் கழித்து மீண்டும், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி சீரியலில் நடிக்கவந்துள்ளார்.

படப்பிடிப்பில் இருந்து எடுத்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..