நடிகர் அபினை வட்டி பிக் பாஸ் 5ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். அவர் பாவனியிடம் பழகிய விதம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அது பற்றி பாவனியே ஒருகட்டத்தில் புகார் சொன்னது பெரிய சர்ச்சை ஆனது.
அதன் பின் எலிமினினேட் ஆகி வெளியே போன அபினை உடன் அவரது மனைவி சண்டைபோட்டு பிரிந்துவிட்டதாக தகவல் பரவியது. அவரது மனைவி இன்ஸ்டாகிராமில் அபினை பெயரை நீங்கியதால் தான் இப்படி ஒரு செய்தி பரவியது. ஆனால் அபினை அது பற்றி பேட்டிகள் எதுவும் கொடுக்கவே இல்லை.
உங்க மனைவி என்ன ரியாக்ட் செய்தார் என நெட்டிசன்கள் கேட்டதற்கு “எல்லா மனைவிகளை போல தான் அவரும் ரியாக்ட் செய்தார்” என அபினை இன்ஸ்டாவில் பதில் கூறினார்.
இந்நிலையில் இன்று பிக் பாஸ் அல்டிமேட் ஷோவில் அபினை பிரெஸ் மீட்டில் கலந்துகொண்டார். அவரை மற்ற போட்டியாளர்கள் சிலர் கேள்வி எழுப்பினார்கள். உங்கள் மனைவி என்ன சொல்லி பிபி அல்டிமேட் ஷோவுக்கு அனுப்பி வைத்தார் என கேட்கப்பட்ட கேள்விக்கு “அது பற்றி நான் பேச விரும்பவில்லை” என தெரிவித்து உள்ளார். ஒருவேளை விவாகரத்து செய்தி உண்மையாக இருக்குமோ என நெட்டிசன்கள் தற்போது பரபரப்பாக பேசி வருகின்றனர்.