தாடிக்கொம்பு சவுந்தரராஜப் பெருமாள் திருக்கோவிலில் பரிவார மூர்த்திகளில் ஒருவராக தன்வந்திரி பெருமாள் அருள்பாலிக்கிறார். இவரை வழிபட்டால் தீராத நோய்களும் தீரும் என்பது திண்ணம்.
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது அதிலிருந்து ஒரு பேரொளி தோன்றி தேவ ரூபம் கொண்டு நான்குகரங்களும் அவற்றில் முறையே சங்கு, சக்கரம், அட்டைபூச்சி, அமிர்தகலசம் இவற்றுடன் தோன்றியவர் தான் ஸ்ரீ தன்வந்திரி பகவான். ஆயுர்வேதம் அவரால் தோன்றியது.
கீழ்க்காணும் மந்திரத்தை ஜெபித்து வந்தாலும் வியாதிகள் நீங்கும்.வெண்ணெயில் மந்திரித்து உண்ணலாம்,மருந்துகள் உட்கொள்ளும் முன் அவற்றை இடது கையில் வைத்து இம்மந்திரம் ஜெபித்து பின் உண்ண வியாதிகள் விரைவாய் நீங்கும்.
ஓம் நமோ பகவதே வாசுதேவாய|
தன்வந்திரியே |
அமிர்தகலச ஹஸ்தாய |
சர்வ ஆமய நசனாய|
த்ரைலோக்ய நாதாய |
ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹா||