தோஷம், பிரச்சனைகளை தீர்க்கும் கருங்காலி மாலை

கருங்காலி மாலையை ஆண் பெண் என இருபாலரும் அணிந்து பயன்பெறலாம். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த மாலை அணிந்தால் தோஷம் நீங்கி திருமண தடைகளை நீக்கும்.

நவகிரக நாயகர்களில் இது செவ்வாய் பகவானுக்குரியது. இவர் கொடுக்கும் அனைத்து பலன்களும் இந்த கருங்காலி மாலை அணிவதன் மூலம் நமக்கு கிடைக்கும். கருங்காலி மரம் மின் கதிர்வீச்சுகளைத் தன்னுள் சேமிக்கும் தன்மை கொண்டது. இதனால் இதன் நிழலில் அமர்ந்தால் கூட நோய் நீங்கும் வல்லமை கொண்டது. தேகம் வலுவடைந்து, ஆன்மா பலமடைந்து ஆண்டவனைச் சரணடைய கருங்காலியைத் தொழுவோம்.

கருங்காலி மாலையை ஆண் பெண் என இருபாலரும் அணிந்து பயன்பெறலாம். நமது உடலில் இரத்தத்தை சுத்தப்படுத்தும். ஜீரண கோளாறு நீங்கும் பெண்கள் மாதவிடாய் கோளாறு சரியாகும். ஆண்,பெண் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பேறுக்கு வழி வகுக்கும். உடலில் சோம்பல் நீங்கி சுறு சுறுப்பு உண்டாகும். மேலும் மாங்கல்ய பலத்தை பலப்படுத்தும். ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும். உடல் உறுதியடைய செய்யும். கோபங்கள் சிறிது சிறிதாக குறையும்.

நம் மன பயத்தை நீக்கி தைரியத்தை வழங்கும். பேச்சுதிறமை அதிகரிக்கும். வியாபார தொழில் போட்டிகளில் வெற்றி கிட்டும். நிலபுலன்கள் வாங்க வழி வகுக்கும். நிலம் சம்மந்த பட்ட தொழில் செய்பவர்கள் இதை அணிந்து கொள்ள அத்துறையில் வெற்றி வாகை சூடலாம். விஷ பூச்சிகள் நம்மை அண்டாமல் பாதுகாக்கும். வாகன விபத்துகளை தடுத்து நமது பயணங்களை பாதுகாக்கும். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த மாலை அணிந்தால் தோஷம் நீங்கி திருமண தடைகளை நீக்கும். சகோதர் பிரச்சனைகள் சரியாகும். கணவன் மனைவி பிரச்சனை இருப்பின் பிரச்சனை நீங்கி கணவன் மனைவி உறவு மேம்படும்.

கருங்காலிக் கட்டையை தண்ணீரில் ஊறவைத்தால் அந்நீரின் நிறம் மாறும். அந்த நீரைக் கொண்டு குளித்து வந்தால், உடலில் உண்டாகும் அனைத்து வலிகளும் நீங்கும்.

கருங்காலி மரம் மேஷம், விருச்சிகம் ராசி, அஸ்வினி, பரணி, விசாகம், அனுஷம், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும், செவ்வாய்க்கிழமை அன்று பிறந்தவர்களுக்கும், மார்ச் 21 முதல் ஏப்ரல் 20 வரை பிறந்தவர்களுக்கும் நல்ல மருந்துமாகும்.

நோய்கள் நீங்க கருங்காலி கட்டையை கையில் தாயத்தாக அணிந்துகொண்டாலும் நல்ல பலன் இருக்கும். எல்லா கோயில்களிலும் கும்பாபிஷேகத்தின் போது கருங்காலி கட்டைகளை கலசத்தின் உள்ளே போடுவார்கள். அதனால் இடி மின்னலால் எந்த பாதிப்பும் அந்த கோயிலை சுற்றி வசிக்கும் நபர்களுக்கு வருவதில்லை. கருங்காலி மரம் ரொம்ப அரிதான மரம். ஒரு சில ஆலயங்களில் மட்டுமே இப்போது இருக்கிறது. மூலிகை மருத்துவர்களின் ஆலோசனைப்படியும் கருங்காலி மரத்தைப் பயன்படுத்தலாம். வீட்டில் கருங்காலி கட்டை வைத்திருந்தால் மிகுந்த நற்பலன்களை அளிக்கும்.