தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். பழனி படத்தில் பரத்திற்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டார்.
அதன்பின் முன்னணி இடத்தினை பிடித்து கோடியில் சம்பளமாகி மார்க்கெட் எகிரும் நேரத்தில் கெளதம் கிச்சுலு என்பவரை காதலித்து திருமணம் செய்தார். கணவர் கூறினால் சினிமாவில் இருந்து விலக தயார் என்று கூறிய காஜல் கமிட்டாகி படங்களில் இருந்து சமீபத்தில் விலகினார்.
அதற்கு காரணம் காஜல் கர்ப்பமாக இருப்பதால் தானாம். இந்நிலையில் அவரின் இடத்தினை பிடிக்க அவரது தங்கை நிஷா அகர்வால் திருமணத்திற்கு பின் கலமிரங்கியுள்ளார்.
ஏற்கனவே ஒருசில படங்களில் நடித்து வந்த நிஷா, திருமணமாகி குழந்தை பெற்ற பின் போட்டோஷூட்டில் ஆர்வமாக இருந்து வருகிறார். தற்போது அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து காஜல் தங்கையா நீங்கள் என்று ஷாக்காகி வருகிறார்கள்.