கோதுமை மாவில் தயார் செய்ய கூடிய சூப்பரான கேக்

நம் உடலுக்கு தேவையான அனைத்து ஆரோக்கிய சத்துக்களும் நிறைந்த கோதுமை மாவை கொண்டு வெறும் 10 நிமிடத்தில் டேஸ்ட்டியான ஸ்வீட் செய்வது எப்படி என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – 1/3 கப்

தேங்காய் துருவல்- அரை கப்

வெல்லம்- 1/3 கப்

தண்ணீர்- 1/3 கப்

வாழைப்பழம்- 3

நெய், ஏலக்காய் தூள்- தேவையான அளவு

செய்முறை

முதலில் வெல்லத்தை தண்ணீரில் கரைத்து எடுத்துக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து நெய் சேர்த்த பின்னர், வாழைப்பழம் சேர்த்து வதக்கி கொள்ளவும், இதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.

மாநிறமாக வந்தவுடன் வெல்ல நீரில் இந்த கலவையை சேர்த்துக் கொள்ளவும், இதனுடன் கோதுமை மாவை சேர்த்து நன்றாக கலக்கவும், இதனுடன் ஏலக்காய் தூள் சேர்த்துக் கொள்ளவும்.

பின்னர் கேக் செய்வதற்கான பாத்திரத்தை எடுத்து அதில் மாவு ஒட்டாமல் இருப்பதற்காக கொஞ்சம் நெய் தடவிக்கொள்ளவும்.

இதில் மாவை சேர்த்து, இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால் சுவையான கோதுமை கேக் தயார்!!