பாடகி லதா மங்கேஷ்கர் மறைவு! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!

பிரபலமான முன்னணி பாடகியான லதா மங்கேஷ்கர் உடல் நிலை மோசமானதால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மும்பையை சேர்ந்த பாலிவுட் மற்றும் தமிழ் பின்னணி பாடகியான லதா மங்கேஷ்கர்(92) கடந்த 70 ஆண்டுகளாக பல்வேறு மொழிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார்.

கடந்த 8-ம் தேதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் மூலம் சுவாசித்து வந்தார்.

இதன்பின்னர், கடந்த நாளில் அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. இந்நிலையில், லதா மங்கேஷ்கர் உயிரிழந்துவிட்டதாகவும், அவரது ஆன்மா அமைதியடைய பிரார்த்தனை செய்வதாகவும் அவரது சகோதரி உஷா மங்கேஷ்கர் தெரிவித்துள்ளார்.

இவர், இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா மற்றும் பத்ம பூஷன், பத்ம விபூஷன் மற்றும் தாதா சாகேப் பால்கே விருதுகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. இவரின் பிரிவுக்கு ரசிகர்கள் மற்றும் பல திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.