கொரோனோவிலிருந்து காத்துக்கொள்ள உதவும் உணவுகள்

கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பதில் வைட்டமின் டி குறைபாடு முக்கிய பங்கு வகிக்கிறது என்று இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்களுக்கு கொரோனா வருவதற்கான வாய்ப்பு மற்றவர்களை விட 14 மடங்கு அதிகமாக இருப்பதாகவும் அவர்கள் கண்டறிந்தனர். இஸ்ரேலில் உள்ள பார் இலன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் 2020 முதல் 2021 வரை சுமார் 253 அரசு நோயாளிகளை ஆய்வு செய்தனர். அவர்களில், வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்களில் 87% பேருக்கு கொரோனா வைரஸ் வருவதற்கான அதிக ஆபத்து உள்ளது.

இது குறித்து ஆய்வாளர்கள் பேசும்போது, வைட்டமின் டி குறைபாடு இருக்கும் நோயாளிகளிடம் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்ததாகவும், சிகிச்சையில் மற்ற மருந்துகளுடன் வைட்டமின் டி அளவை அதிகரித்தபோது குறிப்பிடத்தகுந்த ரிசல்ட் கிடைத்தாகவும் தெரிவித்துள்ளனர்.

நோய் எதிர்ப்பு மண்டலம் பலமாகவும், வைரஸை எதிர்த்து போராடுவதிலும் வைட்டமின் டி-யின் பங்கு மிக முக்கியமானது எனத் தெரிவித்துள்ள ஆய்வாளர்கள், சூரிய ஒளி மூலம் கிடைக்கும் வைட்டமின் டி கொரோனாவை கட்டுப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். மேலும், வைட்டமின் டி நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.