சைப்ரஸிடமிருந்து இலங்கை அரசாங்கம் எரிபொருள் கொள்வனவு செய்யத் தீர்மானித்துள்ளது.
சைப்ரஸின் டெரா கேவிஸ் நிறுவனத்திடமிருந்து 450,000 பீப்பாய் மசகு எண்ணெய் கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. குறித்த நிறுவனம் சமர்ப்பித்த விலை மனுக் கோரலின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் 78 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்ய குறித்த நிறுவனம் இணங்கியுள்ளது.
டொலர் பிரச்சினை காரணமாக எரிபொருள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் கொடுப்பனவு கிடைக்கும் வரையில் எரிபொருளை விநியோகிக்காது காத்திருக்கும் நிலையை அண்மைய நாட்களில் அவதானிக்க முடிகின்றது.
சில எரிபொருள் கப்பல்கள் ஒரு வாரத்திற்கு மேல் கடலில் எரிபொருளுடன் காத்திருந்த சம்பவங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எரிபொருள் கொள்வனவிற்காக இலங்கைக்கு வருடாந்தம் 400 முதல் 500 ட்ரில்லியன் டொலர்கள் தேவைப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.