தக்காளி சட்னி செய்வது எப்படி?

சுவையான காரமான தக்காளி சட்னி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்
தக்காளி – 3
கறிவேப்பிலை – சிறிதளவு
சிறிய வெங்காயம் – 50 கிராம்
உப்பு – தேவையான அளவு
மிளகு – 1 தேக்கரண்டி
கடலை பருப்பு – 1 மேஜை கரண்டி,
கடுகு – அரை தேக்கரண்டி
எண்ணெய் – 1 தேக்கரண்டி

செய்முறை
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை போட்டு வதக்கவும். அடுத்து தக்காளியை சேர்த்து கிளறவும்.

உப்பு, மிளகு சேர்த்து கிளறி இறக்கி ஆறியதும் நன்றாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடலை பருப்பு, கறிவேப்பிலையை சேர்த்து தாளித்து, சட்னியில் சேர்த்து பரிமாறவும்.

சூப்பரான தக்காளி சட்னி ரெடி.