நடிகை யாஷிகா சர்ச்சைக்கு பெயர் போன நடிகைகளில் முக்கியமானவர். இவர் துருவங்கள் பதினாறு, நோட்டா, இருட்டு-அறையில்-முரட்டு-குத்து, கழுகு-2 ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன்பு தனது ஆண் நண்பர்கள் மற்றும் தோழியுடன் உல்லாசமாக காரில் சென்று கொண்டிருந்த போது மதுபோதையில் கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் மிகப் பெரிய அளவில் காயம் அடைந்தார். அவரது உற்ற தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பலமாத சிகிச்சைக்குப் பின்னர் யாஷிகா தற்போது தனது பழைய நிலைக்கு வந்துள்ளார். சமூக வலைதளங்களில் யாஷிகா எப்போதும் பிஸியாகவே இருந்து வருவார். அவர் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் இருந்தபோது கூட சமூக வலைதளங்களில் பதிவிட மறக்கவில்லை.
View this post on Instagram
தனது துக்கம் மகிழ்ச்சி என்று அனைத்தையும் அவர் பகிர்ந்து கொள்வார். அத்துடன் ரசிகர்களின் கேள்விக்கும் அவர் பதில் அளித்து வருவது வழக்கம். இந்த நிலையில் தற்போது யாஷிகா மலைப்பாம்புடன் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.