சுவையான கொண்டைக்கடலை கேரட் சாலட் – செய்வது எப்படி?

கொண்டைக்கடலையில் அதிகமான நார்ச்சத்துக்கள் மற்றும், அதிகப்படியான புரோட்டீன் இரும்பு சத்து போன்றவைகள் அடங்கியுள்ளது.

கொண்டைக்கடலை அன்றாடம் சாப்பிட்டு வருபவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம், இரத்த அழுத்த கட்டுப்பாடுகள் கட்டுக்குள் இருக்கும். இப்பதிவி கொண்டைக்கடலை எப்படி செய்யவேண்டும் என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்.

தேவையான பொருட்கள்;

கொண்டைக்கடலை – 1 கப்

கேரட் – பெரியதாக 3

கொத்தமல்லி – சிறிதளவு

வெங்காயம் – 1

தேங்காய்த் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் – 1

மிளகு தூள் – தேவையான அளவு

எலுமிச்சை சாறு – தேவையான அளவு

இந்துப்பு – சிறிதளவு

செய்முறை விளக்கம்

முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொள்ளவும், கொண்டைக்கடலையை சுத்தம் நன்றாக சுத்தமான நீரில் சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.

அடுத்ததாக, கேரட் துருவிக்கொண்டு, பச்சை மிளகாய் மற்றும், கொத்தமல்லியை சிறிதாக நறுக்கி கொள்ளவும்.

பின்னர் ஒரு பெரிய பாத்திரத்தில், கொண்டைக்கடலை, துருவிய கேரட், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலக்கவும்.

அதோடு, துருவிய தேங்காய், எலுமிச்சை சாறு, உப்பு, மிளகு தூள் கலந்து கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

இப்போது சத்தான கொண்டைக்கடலை கேரட் சாலட் ரெடி!.