சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் ராஜு ஜெயமோகன், இவர் சின்னத்திரையில் ஒளிபரப்பான முக்கிய சீரியல்களில் நடித்துள்ளார்.
அதனை தொடர்ந்து சமீபத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டார். இந்த ஒரு நிகழ்ச்சியில் பெரியளவில் ரசிகர்களை கவர்ந்த ராஜு சீசன் 5 டைட்டில் வின்னராகவும் ஆனார்.
இந்நிலையில் ராஜு இனி சின்னத்திரையில் வரமாட்டேன் என்றும் திரைப்படங்களில் கவனம் செலுத்த உள்ளதாகவும் கூறியிருந்தார்.
அதன்படி வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் பொன்ராம் படத்தில் ராஜு ஹீரோவாகவுள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த தகவல் எந்தளவிற்கு உண்மையனே தெரியவில்லை, இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.