விஜய் பற்றி பேசிய பிக்பாஸ் பாவ்னி

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். அவருக்கு மற்ற நடிகர்களே கூட ரசிகர்களாக இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

இந்நிலையில் பிக் பாஸ் புகழ் நடிகை பாவனி ரெட்டி விஜய் பற்றி கூறி இருக்கும் ஒரு பழைய வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

அந்த வீடியோவில் பாவனி தான் விஜய்யை அதிகம் சைட் அடிப்பேன் என கூறி இருக்கிறார். எனக்கு பலர் மீது கிரஷ் இருந்திருக்கிறது, ஆனால் விஜய் வேற லெவல். அவரது ஸ்டைல், டைலாக் டெலிவரி எல்லாமே அதிகம் பிடிக்கும் என கூறி இருக்கிறார்.