உலகளவில் பிரபலமான தமிழ் இசையமைப்பாளர், நம் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான்.
இவர் கைவசம் தற்போது பொன்னியின் செல்வன், கோப்ரா, அயலான், பத்து தல ஆகிய பல திரைப்படங்கள் உள்ளது.
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் சமூக வலைதள பக்கங்கள் ஆன, இன்ஸ்டாகிராம், டுவிட்டர் உள்ளிட்டவைகளில் ரசிகர்களுடன் இணைத்திருக்கிறார்.
தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் 60 லட்சம் பின்தொடர்பவர்களை கொண்டுள்ள ஏ.ஆர். ரஹ்மான், 94 நபர்களை மட்டுமே பின் தொடர்ந்து வருகிறார்.
இந்நிலையில், இந்த 94 நபர்களில் சன் டிவி சுந்தரி சீரியல் கதாநாயகி, கப்பிரியலாவும் ஒருவர்.
ஆம், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் சுந்தரி சீரியல் நடிகை கப்பிரியலாவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிந்தொடர்வது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.